ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கண்கலங்கிய ஓ.பி.எஸ்... கரம் பிடித்து ஆறுதல் தெரிவித்த சசிகலா

கண்கலங்கிய ஓ.பி.எஸ்... கரம் பிடித்து ஆறுதல் தெரிவித்த சசிகலா

சசிகலா - ஓ.பி.எஸ்

சசிகலா - ஓ.பி.எஸ்

பெருங்குடி மருத்துவமனைக்கு நேரில் வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துஇரங்கல் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலை காலமானார். இதையடுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒ.பி.எஸ்-க்கு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66). கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பெருங்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் ஆகியோரும் வருகை தந்தனர்.

இந்நிலையில் பெருங்குடி மருத்துவமனைக்கு நேரில் வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துஇரங்கல் தெரிவித்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் பேசிய சசிகலா அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் கண்கலங்கிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு சசிகலா தனது ஆறுதலை தெரிவித்தார்.இதனிடையே விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.

ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில். தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி(66) உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலமடைந்து, மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிர மாரடைப்புக்குள்ளானார். உடனடியாக இதயநோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி காலை 6.45 காலமானார் என்று தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: News On Instagram, O Panneerselvam, OPS Wife Vijayalakshmi, Sasikala