ஜனவரி 27-ல் சசிகலா ரிலீஸ் ஆக வாய்ப்பு

ஜனவரி 27-ல் சசிகலா ரிலீஸ் ஆக வாய்ப்பு

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள வி.கே.சசிகலா உத்தேசமாக வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவரது நன்னடத்தை நாட்கள் கழிக்கப்பட்டு, முன்கூட்டியே விடுதலை ஆவார் என்றும் தகவல் பரவியது.

  இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராத தொகையை செலுத்திவிட்டால் அடுத்தாண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


  அதே நேரம் அபராத தொகையை செலுத்த தவறினால் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவார் எனவும், பரோல் வசதியை பயன்படுத்தினால் அவர் விடுதலையாகும் தேதியில் மாற்றம் ஏற்படும் எனவும் சிறைத்துறை நிர்வாகம் கூறியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: