ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா பிறந்தநாள்: தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்

ஜெயலலிதா பிறந்தநாள்: தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்

சசிகலா

சசிகலா

2017-ல் சசிகலா, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் இன்றைய ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டில் வெளியாகி இருக்கின்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  2017-ல் சசிகலா, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் இன்றைய ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டில்  வெளியிடப்பட்டுள்ளது.

  அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் எழுதிய அந்த கடிதத்தில், “அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம். ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில் அதிமுக என்ற இயக்கத்தின் வெற்றி பயணம் தொடரவேண்டும்.

  ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு நீங்கள் அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம். வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா ? தடி ஊன்றியாவது எழுவிட மாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டு அதில் எழுதியிருந்தார்.

  “உழைப்பும், உண்மையும், விசுவாசமும் மட்டும் இருந்தால் போதும் வாழ்வின் உச்ச நிலையை கடைகோடி தொண்டரும் உச்ச நிலையை அடைய முடியும் என்பதை மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்” என் சசிகலா ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.

  மேலும், “ஜெயலலிதாவுடனான 33ஆண்டு பயணத்தின் பொழுதுகளை நினைத்துக்கொண்டே எஞ்சிய வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறங்கிவிடக்கூடாது என்ற அக்கறையாலும், தொண்டர்களின் கட்டளையாலுமே பொதுவாழ்வு என்ற வேள்வியில் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்” என எழுதியிருந்தார்.

  Must Read : இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது

  “அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழ் ஓங்குக!” என்று குறிப்பிட்டு கடிதத்தை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Jayalalithaa, Sasikala