முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘ஒற்றுமை’ என ட்வீட் செய்து ட்ரெண்டில் இணைந்த சசிகலா!

‘ஒற்றுமை’ என ட்வீட் செய்து ட்ரெண்டில் இணைந்த சசிகலா!

சசிகலா

சசிகலா

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ‘எடப்பாடியார்’ என ட்வீட் செய்தது. இதனை எடப்பாடி பழனிசாமி ‘தமிழ்நாடு’ என ட்வீட் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் ஒரு வார்த்தை ட்வீட் எனும் ட்ரெண்டிங்கில் களமிறங்கிய நிலையில், சசிகலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘ஒற்றுமை’ என ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டரில் நேற்று காலை முதலே இந்த ஒற்றை சொல் ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. முதலில் அமெரிக்காவின் ரயில்வே சேவை நிறுவனமான ஆம்ட்ராக், ‘ட்ரெய்ன்ஸ்’ என ட்வீட் செய்ததை தொடர்ந்து, பல்வேறு வணிக நிறுவனங்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு துறை பிரபலங்கள், தனி நபர்கள் என பலரும் ட்வீட் செய்து வந்தனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த ட்ரெண்டை கையில் எடுத்ததும் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரை பலரும் இந்த ட்ரெண்டில் இறங்கி ட்வீட் செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ‘திராவிடம்’ என ட்வீட் செய்ததை அடுத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ‘எடப்பாடியார்’ என ட்வீட் செய்தது. இதனை எடப்பாடி பழனிசாமி ‘தமிழ்நாடு’ என ட்வீட் செய்தார்.

இந்நிலையில் சசிகலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ‘ஒற்றுமை’ என ட்வீட் செய்துள்ளார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘அம்மா’ என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் வாசிக்க: 'திராவிடம்' ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிஙகில் இணைந்த முதல்வர் ஸ்டாலின் - பின்னணி என்ன?

First published:

Tags: Sasikala, Tweet, Twitter, VK Sasikala