2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல், 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அபராதத் தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை, வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு சமீபத்தி செலுத்தியது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அபராதம் செலுத்தினாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 20-க்குப் பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சசிகலா விடுதலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சசிகலா விடுதலை குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறைக்குள் சசிகலா என்னென்ன வேலைகளில் ஈடுபட்டார் எவையெல்லாம் கற்றுக் கொண்டார் என்பது குறித்த தகவல்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன. அரை ஏக்கரில் பப்பாளி மரங்கள் பயிரிட்டு வளர்த்திருக்கும் சசிகலா, கன்னட மொழி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் கணிணி பயின்ற அவர், அணிகலன்கள், கைவினைப் பொருட்களையும் தயாரித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னால் இருந்து தமிழக அரசியலை இயக்கி வந்ததாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படும் சசிகலா தனது சிறைவாசத்தை எப்படி கழித்திருப்பார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதற்கு விடை சொல்லும் விதமாக நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் அமைந்துள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.