அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர
சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று உரிமையியல் நீதிமன்றத்தில் அ
திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நல குறைவால் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜனும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
டிடிவி தினகரன் அதிமுகவின் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலாவையும், தினகரனையும் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனியாக கட்சியை தொடங்கியதால் வழக்கில் இருந்து தினகரன் விலகினார். சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மதுக்கூடங்களுக்கு அனுமதி...100% இருக்கையுடன் பேருந்து சேவை... கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகள் என்னென்ன?
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை தொடர்வதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும் டெல்லி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை அக்டோபர் 27 ம் தேதிக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
மேலும் படிக்க: தமிழகத்துக்கு தனிக்கொடி: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.