தனது தாயைப் பற்றி பேச சசிகலாவிற்கு அருகதை இல்லை என ஜெ.தீபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், சசிகலா கூறியிருந்த வாக்குமூலத்தில், "ஜெயலலிதா கடைசி வரை ஜெ.தீபா மீது நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை. ஜெ.தீபா அவரது தாயைப் போலவே நடந்து கொள்கிறார் எனப் பல முறை ஜெயலலிதா என்னிடம் சொல்லியுள்ளார். இதன் காரணமாகவே ஜெ.தீபா மீது ஜெயலலிதாவுக்கு நல்ல மதிப்பு ஏற்படவில்லை.” என கூறியிருந்தார்.
மேலும், “நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ஜெ. தீபாவின் தாயார் விஜயலட்சுமி ஜெயலலிதாவின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில், தன் உயிருக்கு ஆபத்து எனவும் பாதுகாப்பு தேவை எனவும் பொய் புகார் கொடுத்தார். மேலும், அவர் கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரை சந்தித்து ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். இதேபோல ஜெ.தீபாவும் உள்ளதால் அவரிடம் இருந்து ஜெயலலிதா விலகி இருந்தார்” என தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளித்து ஜெ.தீபா வெளியிட்டுள்ள ஆடியோவில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரின் திருமணத்தின்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே தங்களது உறவு முறிந்ததாகவும், தொடர்ந்து அடிப்படை ஆதாரமின்றி பேசி வரும் சசிகலா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தீபா தெரிவித்தார்.
மேலும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவிடம் புகார் அளித்தது உண்மைதான் எனவும் ஆனால் அது எங்கள் அத்தை ஜெயலலிதா மேல் இல்லை. சசிகலா மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே புகார் கொடுத்தோம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “சசிகலா சொல்வதைப் போல எங்கள் அம்மா கருணாநிதி சந்தித்ததே இல்லை” எனவும் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: J Deepa, Jayalalitha, Sasikala