கழகமும் நீங்களே..! எங்கள் காப்பகமும் நீங்களே...! என
அ.தி.மு.க அலுவலகத்தின் அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். சிறையிலிருந்து விடுதலையடைந்த அவர், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்று பெற்று அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. அதனையடுத்து, தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகிவந்தது. அது தமிழ்நாடு அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதற்கிடையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கட்சியிலிந்து நீக்கப்பட்டனர். சசிகலாவுக்கு எதிராக ஒவ்வொரு
மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் சசிகலா தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்களிடம் பேசிவருகிறார். மேலும், அந்த ஆடியோ விவரங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளார் என்ற தகவல் அறிந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
’கழகமும் நீங்களே..! எங்கள் காப்பாகமும் நீங்ககளே...!’ என்று
அ.தி.மு.க அலுவலகத்தின் அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் கிழித்து எறிந்தனர். அதேபோல, மதுரை புறநகர் பகுதியிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.