• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!

அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!

சசிகலா

சசிகலா

மதுசூதனனை காண சசிகலாவும் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். இதன் காரணமாக இரு தரப்பினரும் பரபரப்படைந்தனர். சசிகலாவின் காரில் அதிமுக கொடியும் இடம் பெற்றிருந்தது. இருவரும் நேர் எதிரே சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது

  • Share this:
உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை காண எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

80 வயதான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் 12 மணி அளவில் அவர் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு சென்ற ஐந்து நிமிடங்களில் மதுசூதனனை காண சசிகலாவும் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். இதன் காரணமாக இரு தரப்பினரும் பரபரப்படைந்தனர். சசிகலாவின் காரில் அதிமுக கொடியும் இடம் பெற்றிருந்தது. இருவரும் நேர் எதிரே சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது.

இதையும் படிங்க: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!




சசிகலாவின் கார் அப்போலோ மருத்துவமனையின் நுழைவுவாயிலில் வரிசையில் காத்திருக்க, வேகவேகமாக எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். நுழைவு வாயிலும் வெளியேறும் வாயிலும் வேறுவேறு என்பதால் இருவரும் கடைசி வரை எதிர் எதிர் பார்த்துக் கொள்ளவே இல்லை. பழனிச்சாமி வெளியேறிய பின்னர் சசிகலாவின் கார் மருத்துவமனை வாயிலுக்குள் நுழைந்தது. இதனால், சுமார் 15 நிமிடங்கள் நீடித்த பரபரப்பு இறுதியில் சத்தமில்லாமல் முடிந்து போனது.

 மேலும் படிக்க: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழுக்கு இனி முதலிடம்!


சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே  தலா ஐந்து நிமிடங்கள் மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: