விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால் விடுதலை செய்யப்பட்ட சசிகலா, முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக பெற்று சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணம் அடைந்த காரணத்தால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு வார காலத்துக்கு வீட்டுத் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை..
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குறைந்திருப்பதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி அவர் சுவாசிப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு சசிகலாவுக்கு சர்க்கரையும் கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு கடந்த 27-ம் தேதி 4 ஆண்டு தண்டனை காலம் முடிந்தது. அதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது குணமாகி விட்டாலும், 1 வாரம் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் 1 வார காலம் அவர் பெங்களூரிலேயே தங்கி இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலை மற்றும் மருத்துவமனையில் இருந்து விடுதலையானதையொட்டி, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.