கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது என தொண்டர்களிடம் சசிகலா பேசி ஆடியோ வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என அறியப்படும் சசிகலா அதிமுகவினருடன் பேசும் ஆடியோக்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட பின்னர் இந்த ஆடியோ விவகாரம் ஓய்ந்ததாக இல்லை. இந்நிலையில் நேற்று தேனியை சேர்ந்த கண்ணன் என்ற தொண்டரிம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது. கட்சி ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிட்டு இருக்கு அதை சரி பண்ணனும். நான் இருக்கும் வரை அதை செய்வேன். தேர்தல்ல அவங்க சொன்னபடி ஜெயிப்பாங்கன்னு தான் ஒதுங்கினேன். அவங்க ஜெயித்து இருந்தா தமிழகத்துல 3-வது முறையா அம்மா ஆட்சி வந்திருக்கும். என்கூட பேசுற தொண்டர்களை கட்சிய விட்டு நீக்கிட்டு இருக்காங்க.
நான் பெங்களூரு சிறையில் இருந்தாலும் 4 வருஷமா என் உடல்தான் அங்கே இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களை சுற்றியே இருந்துச்சு. நான் சிறையில் இருந்தாகூட, தமிழக மக்கள் கொரோனாவால பாதிக்கப்பட கூடாதேனு நான் செய்யாத பூஜை கிடையாது. மாதக்கணக்கில் விரதமும் இருந்தேன்.:” எனப் பேசியுள்ளார்.
அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது ‘சசிகலாவுக்கு எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி நிர்வாகிகள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லை. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் அவர் பேசி வருகிறார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்றார். இப்போது ஏன் இந்த ஆடியோ நாடகம் நடத்துகிறார்.
சசிகலா அ.தி.மு.க-வை அபகரிக்க முயற்சி செய்கிறார். அவர் தனிக்கட்சி தொடங்குவதென்றால் தொடங்கட்டும். சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்கிறார்கள். தாராளமாக சுற்றுப்பயணம் செய்யட்டும். தனிக்கட்சி தொடங்கி அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அ.தி.மு.க போர்வையில் வலம் வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அ.தி.மு.கவினர் யாரும் அவரோடு இல்லை’ என்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.