• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைவு - சசிகலா இரங்கல்

மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைவு - சசிகலா இரங்கல்

சசிகலா

சசிகலா

குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன்

  • Share this:
    மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை இழந்து வாடும் அனைத்து சைவ சமய ஆன்மீக அன்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை சசிகலா தெரிவித்துள்ளார்.

    மதுரை ஆதீன மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77). இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .நேற்று முன்தினம் காலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிந்திருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதீனம் காலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதுரை ஆதீனம் மறைவு குறித்து விகே சசிகலா விடுத்துள்ள இரங்கலில், தமிழகத்தின் மிக தொன்மையான சைவசமய மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். சன்னிதானம் அவர்கள் ஆன்மீகத்தோடு அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் என் மீதும் அவர்கள் காட்டிய அன்பு என்றைக்கும் மறக்க முடியாது.சன்னிதானம் அவர்களை இழந்து வாடும் அனைத்து சைவ சமய ஆன்மீக அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: