அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கட்சித் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களை கட்சியில் இருந்து அவர் நீக்கி அறிவித்தாா். அதில் ஓ.பன்னீா்செல்வத்தின் மகனும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் ஒருவா் ஆவார். ரவீந்தரநாத் அதிமுக சாா்பில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறாா். இந்த நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவின் உறுப்பினா் பதவியிலிருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டு விட்டாா். அதனால், அவருக்கு மக்களவையில் அதிமுகவை சோ்ந்தவா் என்கிற அங்கீகாரத்தை அளிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கட்சித் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பெயரை சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கட்சித் தொண்டர்கள் ஒரு நியாயமன்றற செயலாகத்தான் பார்ப்பார்கள் தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்கமாட்டார்கள்.
கட்சிக்கு நல்லது செய்பவர்களா இவர்கள்? அதாவது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்களை, கட்சித் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? தன் சொந்த விருப்பத்திற்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை, தன் உடம்பில் உண்மையான அதிமுக ரத்தம் ஓடுகின்ற கட்சித் தொண்டர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். அதாவது, இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். இவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது.
உண்மையான கட்சித் தொண்டர்களின் பேராதரவோடு, நம் இயக்கம் சீரோடும் சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது. அதேபோன்று இன்னும் நூறாண்டுககள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்து நம் அம்மாவின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும். இதை எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Op raveendranath, VK Sasikala