விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி சார்பில் 1.5 கோடி ரூபாய் பதிப்பீட்டில் பூங்க்காவுடன் குளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவின் பொதுச்செயலாளார் சசிக்கலாதான் என தினகரன் கூறியது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “எந்த கட்சியிலும் எந்தப் பொறுப்பும் நிரந்தரமானது கிடையாது. ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச்செயலாளர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டது. அப்போது அதிமுகவும் இரட்டை இலையும் யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கட்சிகள் ஒன்றாக இணைந்துவிட்டது. அப்போது, சசிகலாவும் தினகரனும் நாங்கள்தான் அதிமுக என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பில் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் ஆதரவு உள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் தமையிலான அதிமுகதான் உண்மையான அதிமுக என கூறியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என தினகரன் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து சசிக்கலா தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, சசிகலா சட்டவிரோதமாக அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார்” எனவும் கூறினார்.
மேலும், “தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறிவிட்டது அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் உள்ள அதிமுகவுக்குதான் சொந்தம் என்று. மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். 30 ஆண்டுகாலம் ஏமாந்தது போதும். சசிகலாவை யாரும் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை, ஜெயலலிதாவுக்காக அவரை மதித்தோம்.
இன்றைக்கு அதிமுக கொடியை சட்டவிரோதமாக பயன்படுத்தி இருக்கிறார் சசிக்கலா. கொடியை சசிக்கலா அல்லது கட்சியை விட்டு நீக்கியவர்கள் யாராக இருந்தாலும் எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் மீது உரிய வழக்கு தாக்கல் செய்யப்படும். அதிமுக கொடியை பயன்படுத்தித் சசிக்கலா தமிழகத்திற்குள் வந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுப்போம்” என கூறினார்.
மேலும் படிக்க...மருத்துவமனையில் இருந்து சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி
தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என கேபி. முனுசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு, “அது பொதுப்படையாக சொல்லப்பட்டது” எனக்கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister cv shanmugam, Sasikala