சசிகலாவால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு

சசிகலா வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘திரைத் துறையினருக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

    சசிகலா வெளியே வர இருப்பதால் அ.தி.மு.கவில் மாற்றம் ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அ.தி.மு.கவில் எந்த மாற்றத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதலுடன் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.கவில் மாற்றத்தை எந்த சக்தியாலும் ஏற்படுத்த முடியாது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற அறிவிப்பை மக்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

    இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் மாணவர்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்றுதான் கூறவேண்டும். ஏ.ஐ.சி.டி.சி விதிமுறைகளின்படி அரியர்ஸ் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: