சசிகலா பிறந்தநாள் : தி.நகர் வீட்டிற்கு அருகில் பரபரப்பை கிளப்பும் வாழ்த்து போஸ்டர்கள்

சசிகலா

“விரல் விட்டு எண்ணக்கூடிய துரோகிகள் போகட்டும், கோடிக்கணக்கான தொண்டர்கள் உன் பின்னால் இருப்பார்கள்"

  • Share this:
விரல் விட்டு எண்ணக்கூடிய துரோகிகள் போகட்டும், கோடிக்கணக்கான தொண்டர்கள் உன் பின்னால் இருப்பார்கள் என ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போன்ற போஸ்டர்கள் சசிகலா வீடு முன்பு ஒட்டப்பட்டுள்ளது.

சசிகலாவின் 72ஆவது பிறந்தநாளான இன்று தி.நகரில் அவர் வசிக்கும் ஹபிபுல்லா சாலையில் அமமுக, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா வெளியே வந்த பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் சசிகலா ஆதரவாளர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களுக்கு அவரவர் இருக்குமிடத்தில் நலத்திட்டங்களை வழங்கவும் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் இரண்டு நாட்களுக்கு முன் வீடியோ வாயிலாக சசிகலா கூறியிருந்தார்.

வாழ்த்து போஸ்டர்


இருப்பினும் சிலர் மலர் கொத்தோடு அவரை சந்திக்க வருவதும், கோயில்களின் பிரசாதங்களை கொண்டு வருவதுமாக இருக்கின்றன. சசிகலா இல்லம் உள்ள பகுதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

வாழ்த்து போஸ்டர்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், சசிகலாவிற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து சொல்வது போல், “விரல் விட்டு எண்ணக்கூடிய துரோகிகள் போகட்டும், கோடிக்கணக்கான தொண்டர்கள் உன் பின்னால் இருப்பார்கள்"  என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள்  ஒட்டப்பட்டுள்ளன.
Published by:Suresh V
First published: