• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, அதிமுக தலைவர்கள்.. பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்!!

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா, அதிமுக தலைவர்கள்.. பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்!!

வி.கே.சசிகலா

வி.கே.சசிகலா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

  • Share this:
    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின் கடந்த ஜனவரி மாதம் சசிகலா சிறையிலிருந்து விடுதலையானார். இதையடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். எனினும், தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே அதிமுக நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

    தொடர்ந்து, தொண்டர்களின் விருப்பப்படி மீண்டும் அதிமுக தலைமை ஏற்பேன்.. அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஆடியோக்கள் வெளியிட்டு வந்தார். சசிகலாவிடம் பேசிய, அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமை நீ்க்கி வந்தது.

    கடைசியாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் பாத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு அம்மாவுடன் கூட இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு கட்சியில் என்ன நடந்ததோ, அதுவே மீண்டும் நடந்துள்ளது. எனவே நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சசிகலா நாளை செல்ல உள்ளார். ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சசிகலா சார்பில் முன்னாள் அதிமுக நிர்வாகியான வைத்தியநாதன் என்பவர் பெயரில் இம்மனு கொடுக்கப்பட்டது.

    அதேபோல் வருகிற 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி அன்று காலை 10.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்த இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா, மற்றும் வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    இதையடுத்து 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மரியாதை செலுத்த சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் செல்ல இருப்பதால் எந்தவித அசாம்பாவிதமும் நிகழாமல் தடுக்க 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: