Exclusive | சார்பட்டா பரம்பரையும் ஏற்காடும்.. குத்துசண்டை வீரர் டெர்ரி குறித்த எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்..!

sarpatta Parambarai

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பாக்ஸர் ஒருவரை பற்றி, ஒரு காட்சியில் வலுவான வசனத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்தின் உண்மையான நபர் தான் பாக்ஸர் டெர்ரி என்கிறார்கள் ஏற்காடு மக்கள். 

  • Share this:
சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை.  தமிழ்த் திரைப்பட ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ள இந்த திரைப்படம் குறித்து பல்வேறு  விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
பலவிதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பாக்ஸர் ஒருவரை பற்றி, ஒரு காட்சியில் வலுவான வசனத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த கதாபாத்திரத்தின் உண்மையான நபர் தான் பாக்ஸர் டெர்ரி என்கிறார்கள் ஏற்காடு மக்கள்.    தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசபடுபவரும்,  பெரியார் உள்ளிட்ட பல பிரபலங்களால் போற்றப்பட்டவருமான கித்தேரி முத்து என்ற குத்து சண்டை வீரரிடம் தோல்வியடைந்த பின், டெர்ரி ஏற்காட்டில் தான் வாழ்ந்து,  மறைந்தார்.

நத்தானியல் சைமன் டெரி என்ற இயற்பெயரை கொண்ட இவர் சுருக்கமாக நாட் டெரி என அழைக்கப்பட்டார். 1913 ம் ஆண்டு கோலார் தங்கவயல் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை ஆண்ட்ரோ, ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். இவரது  தாயார் மேற்கிந்திய தீவை சேர்ந்தவர்.
டெர்ரி இந்தியாவில் பிறந்து வாழ்ந்ததால், இவர் ஆங்கிலோ இந்தியனாக கருதப்பட்டார்.

Also Read:   வெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

டெர்ரிக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரது குடும்பத்தார் சென்னையில் குடியேறினார்கள். டெர்ரிக்கு எட்டு வயதாக இருக்கும் போதே அவரது தந்தை மறைந்தார், மாணவ பருவத்திலேயே குத்து சண்டையில் ஈடுபட்டு வந்த இவர், பிற்காலத்தில் டைகர் நாட் டெர்ரி என்ற பெயரில் குத்துச்சண்டையில் பங்கேற்று வந்துள்ளார்.

குத்துச்சண்டை வீரர் டெர்ரி


அப்போது சென்னையில் இருந்த பல குத்துச்சண்டை கிளப்புகளில் யாராலும் தோற்கடிக்க முடியாதவராக விளங்கிய காண்போர்ட் ஜாக் என்ற பிரபல குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி வெற்றிபெற்று, தென்னிந்திய குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை பெற்றார். அதன்பின்னர், அருணாச்சலம் என்பவரோடு குத்துச்சண்டை போட்டியில் ஈடுபட்டார், இந்தப் போட்டியில் அருணாச்சலம் மேடையிலேயே உயிரிழந்தார்.

Also Read:   குடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..

இதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, நடைபெற்ற குத்துச்சண்டையில் கித்தேரி முத்துவிடம் தோல்வியடைந்தார் டெர்ரி. அதன் பின்னர் சுந்தரராஜன் என்பவரிடமும் தோல்வி அடைந்ததையடுத்து, குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டார்.

குத்துச்சண்டை வீரர் டெர்ரியின் கல்லறை


இதனிடையே, 1946 ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பிரபல தனியார் ( மான்போர்ட்) பள்ளியில் குத்துச்சண்டை பயிற்சியாளராகவும், உடற்கல்வி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார். இந்தப்பள்ளியில் தொடங்கப்பட்ட என்.சி.சி அமைப்பின் முதல் அதிகாரியாகவும் நியமிக்கப் பட்டார். இந்தப்பள்ளியின் மூலமாக இவரிடம் பயிற்சி பெற்று, பல குத்துச்சண்டை வீரர்கள் உருவானர்கள்.
1972 ம் ஆண்டு இப்பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஏற்காட்டிலேயே வாழ்ந்து 1998 ல் உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்காடு கோவில் மேடு பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் டெர்ரி அடக்கம் செய்யப்பட்ட கல்லறை  இன்றளவும் அவரது புகைப்படத்துடனும் He put up a  great fight and won the last round என ஆங்கிலத்தில் எழுதப்பட்டும் உள்ளது.

அதேபோல், 1950 ம் ஆண்டு முதல் டெர்ரி வாழ்ந்து வந்த பாத்திமா வில்லா என்ற வீடு மான்போர்ட் பள்ளி பின்புறம்  உள்ள கான்வென்ட்  ரோட்டில் இன்றளவும் உள்ளது.

வராற்று ஆய்வாளர் இளங்கோ


இவரை பற்றி ஏற்காடு வராற்று ஆய்வாளர் இளங்கோ கூறும்போது, மிக சிறந்த குத்துச் சண்டை வீரராகவும்,  பயிற்சியாளராகவும் விளங்கிய டெர்ரி, குத்துச் சண்டையில் ஒரே குத்தில் அடித்து கொன்றவர் என்றும், இவர் மீது ஒரு பயமும் ஏற்காடு மக்கள் பலருக்கு இருந்து வந்தது,. ஆனால் தன்னால் அருணாசலம் என்பவர் மேடையில் உயிரிழந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டு நெருக்கமானர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இரக்கமுள்ளவராகவும், எளிமையானவராகவும் வாழ்ந்து மறைந்தவர் டெர்ரி என தெரிவித்தார்.
Published by:Arun
First published: