சர்கார் சர்ச்சையின்போது மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

Web Desk
Updated: December 7, 2018, 9:05 AM IST
சர்கார் சர்ச்சையின்போது மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது
மிரட்டும் விஜய் ரசிகர்கள்
Web Desk
Updated: December 7, 2018, 9:05 AM IST
சர்கார் பட சர்ச்சையை தொடர்ந்து கத்தியுடன் மிரட்டியபடி வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதற்கு அமைச்சர்கள் கண்டனம்  தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, அதிமுகவினருக்கும் , அரசுக்கும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் இலவச பொருட்களை தூக்கி எறிவது போல் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

இதில், இருவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சையை ஏற்படுத்தியது. அரிவாளை கையில் வைத்துக் கொண்டு சுழற்றியபடி மோசமான வார்த்தைகளில் அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசினர்.  இது தொடர்பான புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் என்பதும், வீடியோவை வெளியிட்டவர் அனிஷேக் என்பதும் தெரியவந்தது.

இதில், சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...