எளிய குடும்பத்தில் இருந்து மாநகராட்சி மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்...!
எளிய குடும்பத்தில் இருந்து மாநகராட்சி மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்...!
சரவணன்
கும்பகோணம் மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சரவணன் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.
கும்பகோணம் மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சரவணன் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.
கும்பகோணம் நகராட்சி 150 ஆண்டுகள் பழமையானது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மொத்தம் உள்ள 48 வார்டுகளில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 42 வார்டுகளை கைப்பற்றியது. இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டு வார்டுகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில் கும்பகோணம் மேயர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது.
காங்கிரஸ் கட்சி சார்பில் கும்பகோணம் மேயர் வேட்பாளராக சரவணனை கட்சி தலைமை அறிவித்துள்ளது. சரவணன் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். எளிய குடும்பத்தில் இருந்து வந்த சரவணனுக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.