தவறவிடப்பட்ட பணப்பை: நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஓட்டல் ஊழியர்

தவறவிடப்பட்ட பணப்பை: நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஓட்டல் ஊழியர்
பணப்பையை ஒப்படைக்கும் ஓட்டல் ஊழியர்கள்
  • News18
  • Last Updated: October 2, 2018, 9:06 AM IST
  • Share this:
சென்னை அருகே உணவகத்தில் ரூ.1.88 லட்சம் பணத்துடன் தவறவிடப்பட்ட பையை ஊழியர்கள் போலீசார் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தனர். 

நாவலூரில் உள்ள சரவணபவன் உணவகத்தில் சாப்பிட வந்த திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர்,  விமான நிலையத்திற்கு செல்லும் அவசரத்தில், தனது பையை மறந்து உணவகத்தில் விட்டு விட்டு சென்றுவிட்டர்.

தவறவிடப்பட்ட பையை திருப்பி ஒப்படைத்த ஊழியர்கள்தவறவிடப்பட்ட பையை திருப்பி ஒப்படைத்த ஊழியர்கள்


தவறவிடப்பட்ட பையை திருப்பி ஒப்படைத்த ஊழியர்கள்


அதை பார்த்த ஊழியர் சங்கீதா, மேலாளர் உதவியுடன் காவல் நிலையத்தில் அந்த பையை ஒப்படைத்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் பையை காணாமல் தவித்து வந்த நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அடையாளங்களை வைத்து குறிப்பிட்ட நபரை கண்டுபிடித்து அந்த பையை ஒப்படைத்தனர்.இதனைத்தொடர்ந்து பையை தவறவிட்டவர் ஓட்டல் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல விலை உயர்ந்த நகைகளுடன் தவறவிடப்பட்ட பையை சென்னையை சேர்ந்த மற்றொரு உணவக ஊழியர்கள் போலீசாரிடம்  ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

ALSO WATCH...First published: October 2, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்