சரவணபவன் ராஜகோபால் காலமானார்!

சரவணபவன் ராஜகோபால் காலமானார்!
ராஜகோபால்
  • News18
  • Last Updated: July 18, 2019, 12:18 PM IST
  • Share this:
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ராஜகோபால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சரவணன் பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி சரணடைய அவகாசம் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஜூலை 9ம் தேதி தள்ளுபடி செய்தது.

Also See... ஜீவஜோதி கணவர் கொலையும், சரவணபவன் ஓனரும்... வழக்கு கடந்து வந்த பாதை


இதையடுத்து, அன்றைய தினமே தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட அவர், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி வழங்கினர். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

First published: July 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்