Tamil Nadu Election 2021: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார் சரத்குமார்

Tamil Nadu Election 2021: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார் சரத்குமார்

கமல்ஹாசன்-சரத்குமார்

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்  உள்ளிட்ட பிற கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டது.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். நேற்று புதிய கூட்டணியை  உருவாக்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    ஐஜேகே மற்றும் சமக இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும்,  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்  உள்ளிட்ட பிற கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, இன்று கமல்ஹாசனை சரத்குமார் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

    Must Read: ஐஜேகே-சமக புதிய கூட்டணி: கமல், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்களுக்கு அழைப்பு

     

    இந்நிலையில், ‘ஒருமித்த கருத்து கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால், கமல்ஹாசனை சந்தித்தேன்’ என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: