Home /News /tamil-nadu /

விஜயகாந்த் - சரத்குமார் சந்திப்பு... கூட்டணி பேச்சுவார்த்தையா?

விஜயகாந்த் - சரத்குமார் சந்திப்பு... கூட்டணி பேச்சுவார்த்தையா?

விஜயகாந்த்-சரத்குமார் சந்திப்பு

விஜயகாந்த்-சரத்குமார் சந்திப்பு

மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களித்தால் நல்ல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்

  • News18
  • Last Updated :
    சமத்துவ மக்கள் கட்சி தனது நிலையை 5-ம் தேதி அறிவிக்க உள்ளது என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவுடனான கூட்டணி குறித்து தேமுதிக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தை சரத்குமார் சந்தித்துள்ளது முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    விஜயகாந்தை சந்தித்த பின் பேட்டியளித்த சரத்குமார், ‘விஜயகாந்தை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவருடன் விவாதித்தேன். கூட்டணிக்காக நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. ஒத்த கருத்து உடையவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களித்தால் நல்ல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நாட்டின் நலம் சிறப்பாக இருக்க நல்ல கட்சி நாட்டை ஆள வேண்டும். தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அரசியலாக்கக்கூடாது. சமத்துவ மக்கள் கட்சி தனது நிலையை 5-ம் தேதி அறிவிக்க உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Lok Sabha Election 2019, Sarathkumar, Vijayakanth

    அடுத்த செய்தி