Home /News /tamil-nadu /

சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு... நன்றி மறப்பது நன்றன்று என பேட்டி

சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு... நன்றி மறப்பது நன்றன்று என பேட்டி

சரத்குமார் செய்தியாளர் சந்திப்பு

சரத்குமார் செய்தியாளர் சந்திப்பு

சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் சந்தித்தனர்.

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் இருக்கும் தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களிடமும் ஊடகங்களிடமும் பேசினார் சசிகலா.

    சசிகலா பேசியதாவது, “என்னுடைய அக்கா புரட்சித்தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்த போது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன் அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். திமுக தான் நமக்கு எதிரி அவர்களை வீழ்த்த சபதம் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்று புரட்சித்தலைவி கூறிச் சென்றுள்ளார் அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன்” என்றார்.

    சசிகலா


    இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் வந்து சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “10 ஆண்டுகாலமாக அதிமுக கூட்டணியில் இருக்கும் நாங்கள் ஒவ்வொரு முறை ஜெயலலிதாவை சந்திக்கும்போதும் சசிகலாவை சந்திப்போம். ஒரு குடும்பம் போல் பழகி இருக்கிறோம். அவரிடம் உடல்நலம் விசாரிக்கவே வந்தோம். நன்றி மறப்பது நன்றன்று. நன்றி மறவாமல் அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். ஒன்று இரண்டு இடங்கள் தரும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன்” என்றார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Sarathkumar, Sasikala

    அடுத்த செய்தி