கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக சரத்குமார் அறிவிப்பு

கமல்ஹாசன்-சரத்குமார்.

தான் முதலமைச்சராக ஆவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என்றார் சரத்குமார்.

 • Share this:
  தூத்துக்குடியில் நடைபெற்று வரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொது குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடியில் நடைபெற்று வரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொது குழு கூட்டத்தில் சரத்குமார் மீண்டும் தலைவராகவும் பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் இன்று காலைதொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

  புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்படவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

  அதன் பின்னர் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றி 6வது பொதுக்குழுவினை தொடங்கி வைத்தார். பொதுகுழு கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்லாயிரகணக்கான கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

  இந்நிலையில், கூட்டத்தில் பேசிய சரத்குமார், இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக கூறியுள்ளார். மேலும், தான் முதலமைச்சராக ஆவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

  மேலும், “மக்கள் இன்று திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து வேறு நல்ல கூட்டணி அமையுமா என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

  மக்கள் நீதி மையம் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்தது, பேச்சுவார்த்தை தொடா்ந்து வருகிறது. கமல்ஹாசனுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டிருக்கிறன. இன்னும் சில நாட்களில் நல்ல கூட்டணி உருவாகும்” என்று கூறியுள்ளார்.

  Must Read: சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு: ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு

   

  இதனால், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
  Published by:Suresh V
  First published: