• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil Nadu Election 2021 | ஐஜேகே-சமக புதிய கூட்டணி: கமல், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்களுக்கு அழைப்பு

Tamil Nadu Election 2021 | ஐஜேகே-சமக புதிய கூட்டணி: கமல், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்களுக்கு அழைப்பு

சரத்குமார்-ரவி பச்சமுத்து

சரத்குமார்-ரவி பச்சமுத்து

இந்தக் கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும், கூட்டணியில் இணையக் கூடிய அனைத்து கட்சிகளுக்குமே சமமான தலைமைதான் இருக்கும் என்றார் சரத்குமார்.

  • Share this:
    ஐஜேகே மற்றும் சமக இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. மாற்றத்தை விரும்பும் கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்றும், வரும் நாட்களில் மாற்றத்திற்கான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் எனவும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

    அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகியது. அதேபோல, திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி விலகியது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து, மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். மாற்றத்தைத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய ஜனநாயக் கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் முதல் கட்டமாக இணைந்து புதிய மாற்றத்திற்கான கூட்டணியை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்தக் கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும், கூட்டணியில் இணையக் கூடிய அனைத்து கட்சிகளுக்குமே சமமான தலைமைதான் இருக்கும் எனவும் சரத்குமார் தெரிவித்தார். மேலும், நாட்டிற்கு மாற்றத்தைத் தரவேண்டும் என்று எண்ணத்தில், இதை உருவாக்கியுள்ளோம். மாறத்தை எதிர்பாப்பவர்களுக்காக இந்த கூட்டணி உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

    எல்லா மத, இன மக்களை ஒன்றாக பார்க்கும் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நலனுக்கானவர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய சரத்குமார், இது மாற்றத்திற்கான முதல் கூட்டணி என்றும் தெரிவித்தார். நாங்கள் மாற்றம் வேண்டும் என்பதில் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கின்றோம். எங்களைப் போல் பலர் உள்ளனர். அவர்களையும் இந்த கூட்டணியில் இணைய அழைக்கிறோம் என்றார்.

    மேலும், ரஜினி மக்கள் மன்றம் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராக உள்ளனர் என்றார் சரத்குமார்.

    என்னதான் பாரிவேந்தர் நல்லது செய்தாலும், அது திமுகவிற்குதான் செல்கிறது. ஆனால், எங்களுக்கும் கட்சிக்கும் அங்கீகாரம் வேண்டும். கமல், நல்லவர்கள் வரவேண்டும் என்கிறார் நாங்களும் அதையே சொல்கிறோம் அதனால் இணைவோம் என நினைக்கிறோம் என சரத்குமார் தெரிவித்தார்.

    அடுத்து வரும் நாட்களில் மேலும் பல்வேறு கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

     

    Must Read: Tamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

     

    இந்த சந்திப்பின்போது, இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், துணை பொதுச்செயலாளர் ரவி பாபு, கட்சியின் முதன்மை அமைப்புச் செயலர் எஸ். வெங்கடேசன், கொள்கைபரப்பு செயலாளர் எம். எஸ் ராஜேந்திரன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: