சரத்குமார் - ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை - சமக வேட்பாளர்கள் அறிவிப்பு

சரத்குமார் - ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை - சமக வேட்பாளர்கள் அறிவிப்பு

சரத்குமார், ராதிகா சரத்குமார்

உழைப்பு, சேவையின் அடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சியில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றது - சரத்குமார்

  • Share this:
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தானும் தன்னுடைய மனைவி ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த சரத்குமார் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதையடுத்து சமத்துவமக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பின்னர் கூட்டணியில் இணைந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்ப பெறப்பட்டதாகவும் எனவே 37 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள சமக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அதிமுக, திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் ஒருசில மட்டும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கும் எனவும் மக்கள் உழைத்து பொருட்களை பெற்றுக்கொள்வார்கள், இலவச பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் உழைப்பு, சேவையின் அடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சியில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றதாக தெரிவித்த சரத்குமார் சமக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றி வாகை சூட உழைக்க வேண்டியிருப்பதால் நானும் என் மனைவியும் முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
Published by:Sheik Hanifah
First published: