நீலகிரி மாவட்டம் முழுக்க முழுக்க அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றம் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள், மலைகள் காண்போரை அசரவைக்கும்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியை நேசித்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியேறியவர்தான் சரண்தீப் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் அமெரிக்காவில் விமானியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி உதகையில் உள்ள தனியார் சர்வதேசப் பள்ளியில் பயின்றவர். மனைவியின் விருப்பத்திற்காக பணி ஓய்வுக்குப் பிறகு இந்த மண்ணையும் தமிழர்களையும் நேசித்து இங்கேயே குடியேறிவிட்டார்.
பணி ஓய்வில் வந்த பணத்தை வைத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆடுதுறை என்ற பகுதியில் தனக்காக ஒரு வீடு மற்றும் அதனைச் சுற்றி சிறிய அளவிலான நிலத்தையும் வாங்கியுள்ளார்.
புதர் மண்டிக் கிடந்த அந்த இடத்தை என்ன செய்வது என யோசித்த சரண் தீப் சிங், மேட்டுபாளையம் அரசு தோட்டக்கலை பண்ணையில் 100 ரூபாயக்கு மூங்கில் நாற்றுக்கள் வாங்கி தனது நிலத்தில் தோட்டம் அமைத்து நடவு செய்துள்ளார்.
பராமரிக்க அதிக செலவு இல்லாததால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மூங்கில்கள் நன்றாக வளர்ந்து விற்பனைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மூங்கில்களை அனைத்து தரப்பு மக்களும் நடவு செய்ய வேண்டும், அதன் மூலம் லாபம் ஈட்டலாம் என்றார்.
தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து இந்த மூங்கில்களை வாங்கிச் செல்வதாகவும், மூங்கில்கள் 100 ரூபாய்க்கு வாங்கியது தற்போது 40,000 மேல் விற்பனை ஆகுகிறது எனவும் பெருமிதம் கொள்கிறார். இதனைக் கொண்டு ஏணி, கோழி கூண்டு, வளர்ப்பு பறவைக் கூண்டு, தோட்ட வேலிகள் உள்ளிட்டவைக்கு இந்த மூங்கில்கள் அதிகளவில் பயண்படுவதாகத் தெரிவித்தார். மக்களையும் மூங்கில் வளர்பில் ஆர்வம் காட்ட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வனத்தின் மீது அதிக அக்கறை கொண்ட இவர், தனது இல்லம் அமைந்துள்ள பகுதி மற்றும் பாரதியார் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வனப்பகுதி கொண்டதால் வனத்தைக் காப்பாற்ற முடிவு செய்தார். அதன்படி அந்த கிராம பகுதிகளில் மரங்களை யாரேனும் வெட்டுவது குறித்து தகவல் கொடுத்தால் அவர்களுக்கு 5000 ரூபாய் தருவதாக நோட்டீஸ்யும் வழங்கியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் மரங்கள் வெட்டி காடுகள் அழிப்பது குறைந்துள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் இத்திட்டதிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், சிங் தனது தோட்டத்தில் பல வகையான பழ மரங்களை வளர்ப்பதுடன், தனது இல்லத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்களைச் சேகரிப்பதுடன் தமிழையும் கற்று வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Social activist