சஞ்சய் தத் விடுதலை ஆவணங்கள் கிடைக்கச் செய்யவேண்டும் - மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு

சஞ்சய் தத் விடுதலைக்கான ஆவணங்களை எரவாடா சிறைத்துறை வழங்கவில்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சஞ்சய் தத் விடுதலை ஆவணங்கள் கிடைக்கச் செய்யவேண்டும் - மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு
பேரறிவாளன், சஞ்சய் தத்.
  • Share this:
நடிகர் சஞ்சய் தத் விடுதலைக்கான ஆவணங்களை வழங்கவில்லை என குற்றம்சாட்டி, எரவாடா சிறைத்துறை மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சஞ்சய் தத்தின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த போதிலும், மகாராஷ்டிரா மாநில அரசு அதன் அதிகாரங்களுக்கு உட்பட்டு முன்விடுதலை செய்தது. இதுதொடர்பாக பின்பற்றப்பட்ட சட்ட விதிமுறைகளையும், முக்கிய ஆவணங்களையும் வழங்கக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் கோரியிருந்தார்.

Also read: ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - சீமான் பெருமிதம்


ஆனால், எரவாடா சிறையின் தகவல் அதிகாரி சரியான தகவல்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எரவாடா சிறைத்துறை மீது குற்றம்சாட்டியும், இது தொடர்பாக மாநிலத் தகவல் ஆணையத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தனக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுத்தரக் கோரியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading