உயிர் காக்கும் தூய்மைப் பணி ராணுவம்; வீட்டிலிருங்கள்., தூய்மை பணியாளர்களைப் போற்றுங்கள்..!

"சுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் துப்புரவு பணியாளர்கள்"

உயிர் காக்கும் தூய்மைப் பணி ராணுவம்; வீட்டிலிருங்கள்., தூய்மை பணியாளர்களைப் போற்றுங்கள்..!
தூய்மைப் பணியாளர்
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 10 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்றி வருவதால், மருத்துவர்களுக்கு இணையாக தாங்கள் மதிக்கப்படுவதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பணியின் மூலம் மக்களுக்கு சேவையாற்றுவதை எண்ணி பெருமிதம் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக்கொண்டு, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். மருத்துவர்கள், செலிவியர், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார அமைப்பினர் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இரவு பகலாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு இணையாக நாடு முழுவதும் சுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் துப்புரவு பணியாளர்கள் .

கிருமி நாசினி தெளிப்பது, ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைக் கூழங்களை அகற்றுவது என தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள். வீட்டில் இருப்பவர்களே அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆபத்து உள்ளது என தெரிந்தே, பொதுவெளியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு, இவர்கள் சுகாதார காவலர்களாக உலா வருகின்றனர்.


தூய்மைப் பணியில் ஈடுபடுவது கவுரவ குறைச்சலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நாட்டை காக்க வந்தவர்கள் போன்று தங்களை, மக்கள் கருதுவதாக தூய்மை பணியாளர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று மற்றும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில், "வருமுன் காப்போம்" நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், துளி கூட இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் களத்தில் நின்று பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் ஒரு வகையில் மருத்துவர்களே.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் களத்தில் நின்று சுழன்று பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதில் தூய்மைப் பணியாளர்கள் தவிர மற்றவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுகிறார்கள் தூய்மை பணியாளர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மரியாதை இருப்பதில்லை அதை அவர்களும் கண்டுகொள்வதில்லை கருமமே கண்ணாயினார் என்ற சொல்லுக்கு ஏற்ப அவர்கள் தங்கள் பணியை திறம்பட செய்து வந்தனர் இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்று அச்சம் காரணமாக அனைவரையும் வீடுகளிலேயே இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் நின்று தங்களது உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றி வருகின்றனர் தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்புகளை வெளியிடும் நிலையில் அதை களத்தில் நின்று செயல்படுபடுத்துபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி தினமும் 10 மணி நேரத்திற்கு மேலாக சாலைகளிலும் தெருக்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினிகளை தெளிப்பது சாலைகளை சுத்தம் செய்வது மருத்துவமனைகளில் மருந்துகள் தெளிப்பது கொரோனா பாதித்தவர்கள் உள்ள வார்டுகளிலும் பணியாற்றுவது என தூய்மைப் பணியாளர்கள் பணி மெச்சும் அளவிற்கே உள்ளது விடுமுறை ஓய்வின்றி உழைத்து வரும் அவர்களிடம் பேசுகையில் அவர்கள் கூறியது கண்களில் நீர் கோர்க்க செய்தது

எங்களை கீழ்தரமாக நினைத்தவர்கள் கூட இப்போது எங்களால் நாடும் ஊரும் சுத்தமாகி உள்ளதை உணர்ந்துள்ளனர். மனப்பூர்வமான சேவையாகவே எந்த கஷ்டமும் இல்லாமல் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறோம். அதிகாலை முதல் மாலை வரை பணியாற்றுகிறோம் உணவு இடைவேளை நேரங்களில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அழைத்தால் அப்போதும் பணியாற்றுகிறோம்

உயிர் காக்கும் ராணுவமாக செயல்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரத்தையும், பெருமதிப்பையும் வழங்குங்கள். அவர்கள் சமூகத்துக்கு சேவை செய்ய விதிக்கப்பட்டவர்கள் அல்ல சேவையாளர்கள்..!

 
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்