Home /News /tamil-nadu /

சந்தன கடத்தல் வீரப்பன் சகோதரர் மாதையன் மரணம்

சந்தன கடத்தல் வீரப்பன் சகோதரர் மாதையன் மரணம்

வீரப்பன் - மாதையன்

வீரப்பன் - மாதையன்

வீரப்பனின் அண்ணனும் அயுள் தண்டை கைதியாக செரலம் சிறையில் இருந்து வந்தவருமான மாதையன் உயிரிழந்தார்...

பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 35 வருடம் சிறையில் இருந்து வந்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சார்ந்தவர் மாதையன் ( வயது 75 ) . கர்நாடகா மற்றும் தமிழக போலீசாருக்கு பெருந்தொல்லையாக இருந்த  பிரபல சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன்  தான்  மாதையன். இவர் கடந்த 1987 ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் . இவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன் , சத்தியமங்கலம் கொலை வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . பின்னர் சேலம் மத்திய சிறைக்கும் , இங்கிருந்து மீண்டும் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டார் .கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

Also Read: சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிய உணவு.. காவலரின் உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ

மாதையன் இருதய நோய் , சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு , கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் . ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மாதையன் அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். சிகிச்சை முடிந்து மீணதும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவார். அதேபோல் அவருக்கு அவ்வப் போது சிறை அதிகாரிகள் பரோல் வழங்கியும் வந்தனர். கடந்த மாதம்  பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது . இதையடுத்து அவர் சேலம் அரசு மருத் துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களாக மாதையனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர் . தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மாதையன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Published by:Ramprasath H
First published:

Tags: Died, Jail, Sandalwood veerappan, Tamilnadu, Veerappan

அடுத்த செய்தி