ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தர்காவின் 466 வது ஆண்டு கந்தூரி விழா : சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது

தர்காவின் 466 வது ஆண்டு கந்தூரி விழா : சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது

சந்தனக்காப்பு

சந்தனக்காப்பு

Nagor Dharga | நாகூர் தர்காவில், கந்துாரி விழாவின் சந்தன கூடு ஊர்வலத்தை முன்னிட்டு சந்தனம் அரைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 466 வது ஆண்டு கந்துாரி விழா,கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா ஜனவரி 3ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தன கட்டைகளை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி அரைக்கும் பணியானது தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த யாத்திரிகர்கள், விரதம் இருந்து சந்தனமரங்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வரும் 2 ம் தேதி ஒப்படைக்கப்படும். அங்கிருந்து சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு, 3 ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும். பின் நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

First published:

Tags: Tamil Nadu