கடலூரில் மணல் கொள்ளையால் ரயில்வே பாலம் இடியும் அபாயம்!

சிறுக சிறுக நடைபெறும் மணல் கொள்ளை, ஒரு பாலத்திற்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பூதாகரம் ஆகியுள்ளது. பாலம் சேதமடையும் முன் அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா என்பதே அனைவரின் முன் எழும் கேள்வியாக உள்ளது.

Web Desk | news18
Updated: July 7, 2019, 4:25 PM IST
கடலூரில் மணல் கொள்ளையால் ரயில்வே பாலம் இடியும் அபாயம்!
ரயில்வே பாலம்
Web Desk | news18
Updated: July 7, 2019, 4:25 PM IST
கடலூரில் ரயில்வே பாலத்தின் கீழ் நடைபெறும் மணல் கொள்ளையால் பாலங்கள் சேதமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் போல் மணல் தோண்டப்படுகிறது.

வழக்கமாக மணல் கொள்ளையர்கள் பொக்லைன் எந்திரங்களை கொண்டு லாரிகளில் மணல் கடத்தப்படுவதே வழக்கம். ஆனால் இங்கு இரு சக்கர வாகனத்தில் மூட்டை மூலம் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. நீண்ட காலமாக கெடிலம் ஆறு வறண்டு கிடப்பதால்,  மணல் கொள்ளையர்கள் ஒவ்வொரு மூட்டையாக நிதானமாக மணலை கொள்ளையடித்து வருகின்றனர்.

ரயில்வே பாலத்தின் அஸ்திவாரம் வரை மணல் எடுக்கப்படுவதால் இது பெரும் அபாயத்திற்கு வழி வகுக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த ரயில்வே பாலம் சேதமடைய வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இங்கு மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

சிறுக சிறுக நடைபெறும் மணல் கொள்ளை, ஒரு பாலத்திற்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பூதாகரம் ஆகியுள்ளது. பாலம் சேதமடையும் முன் அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா என்பதே அனைவரின் முன் எழும் கேள்வியாக உள்ளது.

Also watch: ரயில்வே துறை தனியார் மயமானால் ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்? எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் பேட்டி 

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...