• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் ஜோராக நடக்கும் மணல் கொள்ளை - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

சிவகங்கையில் ஜோராக நடக்கும் மணல் கொள்ளை - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

சிவகங்கையில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மணல் கொள்ளை.

சிவகங்கையில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மணல் கொள்ளை.

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையர்கள் மணல் மூலம் கோடிகளைக் குவித்து வருகின்றனர்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி பல கோடிகள் குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சவுடு மணல், கிராவல், உபரிமன் எனப் பல வகைகளில், 50 அடி முதல் 70 அடி வரை மணல் அள்ளி, மணல் கொள்ளையர்கள் கோடிகளைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக வைகை ஆற்று மணலுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். 1 லோடு மணல் 70 முதல் 80 ஆயிரம் வரை விற்பனை செய்யபடும். இந்த மணல் கொள்ளையர்கள் வைகை ஆற்றையொட்டி பட்டா பகுதிகளில் அனுமதி வாங்கிவிட்டு பல அடிக்கு மணல்களைப் பிரித்து அதை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து எடுக்கப்படும் மணல் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் மதுரைக்கு மட்டுமே செல்லுகின்றன என்கிறார்கள்.

Also see:

மேலும், இதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அந்தப் பகுதி வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்றும் இவர்களின் ஒத்துழைப்புடன்தான் மணல் அள்ளப்படுகிறது என்றும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: