போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் மாஃபியா கும்பல்..

போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் மாஃபியா கும்பல்..

கோப்புப் படம்

நாகையில் மணல் கடத்தல் கும்பல், போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  வேதாரண்யம் அருகே உள்ள தென்னம்புலத்தை சேர்ந்த வீரமணி என்பவர் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வீரமணி எவ்வித அனுமதியுமின்றி டிராக்டரில் மணல் ஏற்றி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் டிராக்டரை நிறுத்திய போது நடுவழியிலேயே விட்டுவிட்டு வீரமணி தப்பியோடிவிட்டார். பின்னர், டிராக்டரை காவலர் டீன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் காவல்நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.

  அப்போது காவல்நிலையம் அருகே டிராக்டரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் டிராக்டரை விடுவிக்க கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு காவலர்கள் மறுப்பு தெரிவிக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல், காவலர் டீன் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளது. இதில் அவருக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும் மற்றொரு காவலரான வெற்றிவேல் மீதும் தீ பரவியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. மணல் கடத்தல் கும்பல் காவலர்கள் மீதே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க... நாடு முழுவதும் புதிதாக 162 ஆக்சிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: