பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் மதிய உணவுக்காக ரூ. 5000 அவர் செலவு செய்ததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். வியூஸ் பெற அவர் வெளியிட்ட ஃபுட் வீடியோ கடைசியில் அவருக்கே தலைவலி தந்து விட்டது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனக்கென பல ரசிகர்களைப் பெற்றவர் முன்னணி மாடல் சம்யுக்தா. பிக் பாஸ் வீட்டில் இவர் இருக்கும் போதே ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார். ஆரியின் வளர்ப்பு பற்றி இவர் பேசிய விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. கமல்ஹாசனால் கேள்வியும் கேட்கப்பட்டது. பிக் பாஸ் ஷோவில் இருந்து இவர் வெளியே வந்த பிறகு தொடர்ந்து மாடல் ஷோக்களை நடத்தினார். இடையில் சின்னத்திரையிலும் எட்டி பார்த்தார். ஒருசில படங்களிலும் கமிட் ஆனார். அதுமட்டுமில்லை தற்போது ஒளிபரப்பாகவுள்ள ஜீ தமிழ் குட்டீஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் வர உள்ளார்.
இவர் விஜய் டிவி பாவனாவின் நெருங்கிய தோழியும் கூட. லாக்டவுனில் யூடியூப்பில் சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கியவர் அதில் குக்கிங், மேக்கப், டிராவல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சம்யுக்தா எலைட் லைஃப் வாழ கூடியவர் என்பது அவரின் வீடு, உடை மற்றும் அவரின் வருமானம் குறித்து வெளியான தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஃபுட் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? சிறுவனாக இருந்தபோதே கொலை செய்யப்பட்ட தாய்
கேரளாவை சேர்ந்த சம்யுக்தா, அண்மையில் அவரின் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். அப்போது தான் திருவனந்தபுரத்தில் இருக்கும் உலக புகழ்ப்பெற்ற, பல விருதுகளை சொந்தமாக்கிய பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு மதிய உணவு உண்ண சென்றார். அந்த ஹோட்டல் தான் அவருடைய ஃபேவரெட் ஹோட்டலும் கூட. இந்த ஹோட்டலை சுற்றி காட்டியப்படி அவர் அங்கு இருக்கும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதை ஒருபக்கம் வீடியோவாகவும் ஷூட் செய்து கொண்டிருந்தார்.
எல்லா உணவுகளையும் ருசி பார்த்த பின்பு அதற்கான பில்லையும் அவர் பே செய்தார். மொத்தம் ரூ. 5000 என பில்லையும் காட்டினார். அதுதான் சர்ச்சைக்கு காரணமாகவிட்டது. ஒருவேளை உணவுக்கு ரூ. 5000 செலவு செய்வது எல்லாம் ஓவர் என்று அந்த வீடியோவுக்கு கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் ”ரூ. 5000 இருந்தால் நாங்கள் 2 மாசத்துக்கு சாப்பிடுவோம் ”என்றும், ”இந்த பணத்தை ரோட்டில் சாப்பாடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கோம்” என்றும் வேறு சில ”எங்களுடைய சாம சம்பளமே ரூ. 5000 தான் , பல் இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான்” என்று பலவகையான நெகட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் டிவி நந்தினி காட்டில் அடை மழை.. பிரபல நடிகர் படத்தில் கமிட்!
அதே நேரம் சம்யுக்தாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ”அவர் உழைக்கும் பணத்தில் அவர் விரும்பிய செலவு செய்கிறார்” என்றும், ”இது அவரின் தனிப்பட்ட விருப்பம்” என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.