ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜனவரியில் அறிமுகமாகும் புதிய Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்ஃபோன்!

ஜனவரியில் அறிமுகமாகும் புதிய Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்ஃபோன்!

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட் ஃபோன் 64MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சாருடன் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட் ஃபோன் 64MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சாருடன் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட் ஃபோன் 64MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சாருடன் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

 • 2 minute read
 • Last Updated :

  வழக்கம் போல ஜனவரி முதல் வாரத்தில் வாடிக்கையாளர்கள் மின்னணு கண்காட்சி (Customers Electronics Show - CES) நடைபெற உள்ளது. இந்நிலையில் தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் CES 2022-க்கு முந்தைய நிகழ்வை (pre-CES event) ஜனவரி 4 அன்று ‘டுகெதர் ஃபார் டுமாரோ’ (Together for Tomorrow) என்ற நேரத்துடன் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் Galaxy S21 FE ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த நிகழ்ச்சியில் Samsung Electronics DX பிரிவின் துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவரான ஜாங்-ஹீ (Jong-Hee) அவர்களால் முக்கிய உரை நிகழ்த்தப்படும் என தெரிகிறது. பல தகவல்கள் கசிந்தாலும் இதுவரை Samsung Galaxy S21 FE இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதன் முன்னோடியான Samsung Galaxy S20 FE ஆனது கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

  சிப் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய விநியோக தடைகள் காரணமாக Samsung Galaxy S21 FE-ன் அறிமுகம் தொடர்ந்து தாமதமானதாக கூறப்படுகிறது. இதன் வெளியீட்டு தேதி ஜனவரி 4 என்று ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சாம்சங் அதன் pre-CES event-ஐ அதே தேதியில் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

  சாம்சங் தனது Galaxy S21 FE டிவைஸை 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ் 8GB + 128GB வேரியன்ட் 920 யூரோ அதாவது தோராயமாக ரூ.78,100-க்கு அறிமுகப்படுத்தப்படலாம். அதே போல 8GB + 256GB வேரியன்ட்டிற்கான விலை 985 யூரோ அதாவது தோராயமாக

  ரூ. 83,700-ஆக நிர்ணயிக்கப்படலாம். மேலும் இந்த டிவைஸ் வொயிட், பிளாக், க்ரீம் மற்றும் லாவெண்டர் ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.

  இந்த போன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.5-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மேலும் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4,500 mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் Snapdragon 888 அல்லது Exynos 2100 சிப்செட்டைப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Also read... உடனடியாக அப்டேட் செய்யுங்கள்... ஐஃபோன், மேக்புக் யூஸர்களுக்கு அரசு எச்சரிக்கை

  மேலும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட் ஃபோன் 64MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சாருடன் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். செல்ஃபிக்களுக்காக இந்த ஃபோனில் 32MP ஃப்ர்ன்ட் கேமரா இருக்கும். இது ஆண்ட்ராய்டு 11-ஐ OneUI 3 லேயருடன் இயக்கும். இந்த டிவைஸில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் USB Type-C போர்ட், ப்ளூடூத், Wi-Fi, 5G, 4G உள்ளிட்டவை அடங்கும்.

  First published: