சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், மடிப்பாக்கத்தில் கொல்லப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.
திமுகவில் 188வது வட்டச் செயலாளராக பொறுப்பில் இருந்தவர் மடிப்பாக்கம் செல்வம். இவர் கடந்த 1-ம்தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நிலையில் செல்வம் கொல்லப்பட்டது தமிகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழில் போட்டிதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், செல்வத்தின் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செல்வத்தின் மனைவி சமீனா செல்வம், திமுக வேட்பாளராக 188வது வார்டு கவுன்சிலர் பொறுப்புக்கு நிறுத்தப்பட்டார்.
இதையும் படிங்க -
உள்ளாட்சி தேர்தல் : ஓபிஎஸ் தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சியை கைப்பற்றியது திமுக
இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சமீனா செல்வம், 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க -
பொள்ளாச்சி நகராட்சியில் திமுக அபார வெற்றி... அடுத்தடுத்து சரியும் அதிமுக கோட்டைகள்
நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி வருகின்றன. இதையடுத்து கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.