lockdown | அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வு, கட்டுப்பாடு: மருத்துவ குழு பரிந்துரை

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வு, கட்டுப்பாடு: மருத்துவ குழு பரிந்துரை

வகை 1ல் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், தளர்வுகள் குறைவாக அளிக்கப்பட்டு வந்தன.

  • Share this:
    அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வு, கட்டுப்பாடு அளிக்க முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் வகை ஒன்றில் 11 மாவட்டங்களும், வகை 2ல் 23 மாவட்டங்களும், வகை 3ல் 4 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் வகை 1ல் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், தளர்வுகள் குறைவாக அளிக்கப்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5ம் தேதி நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ அதிகாரிகள், வல்லுநர்களுடன், இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார்.

    Also read: சேலம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தைகளின் தாய் இறந்ததாக கணவர் ஆட்சியரிடம் புகார்!

    அதில், 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு சேர்த்து, ஒரே மாதிரி கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் வழங்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு முதல்வருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

    குறிப்பாக வகை 2, 3ன் கீழ் வரும் மாவட்டங்களில் பொது போக்குவரத்து மற்றும் மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வகை 1ன் கீழ் உள்ள 11 மாவட்டங்களிலும் பொது போக்குவரத்தை அனுமதிப்பது, டாஸ்மாக் கடைகளை திறக்க தளர்வுகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published: