தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் பிரசாரம், கூட்டணி, வேட்புமனு தாக்கல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்க கோரி சமத்துவ மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரால் தொடங்கப்பட்ட கட்சி, இதுவரை அனைத்து தேர்தல்களிலும் களம்கண்டு வருவதாகவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 தொகுதிகளில் போட்டியிடுவதால் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 1-ல் மனு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்டு ஆனால் அங்கீகரிக்கபடாத கட்சிக்கு இரண்டு பொது தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதன் அடிப்படையில் பொது சின்ன கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19ஆம் தேதியுடன் முடிவடைவதால், தாமதமில்லாமல் பொதுச் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனவும், தாமதமாக ஒதுக்கினால் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: All India Samathuva Makkal Katchi, Radhika sarathkumar, Sarathkumar, TN Assembly Election 2021