மநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு

மநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு

ம.நீ.மய்யம் கூட்டணி பங்கீடு

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

  • Share this:
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன. கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்றும் சரத்குமார் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்ற விவரத்தை கூட்டணி கட்சிகள் முடிவெடுத்து அதற்கான பட்டியலை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.Must Read : குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1500 ; ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுதாக்கல் 12 ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: