ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேங்கைவயல் கோயிலில் சமத்துவப் பொங்கல்.. அமைச்சர்கள் பங்கேற்பு..!

வேங்கைவயல் கோயிலில் சமத்துவப் பொங்கல்.. அமைச்சர்கள் பங்கேற்பு..!

சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் 3 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் மலம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் இவ்வழக்கை மாவட்ட காவல்துறையினர் விசாரித்த சூழலில், அதன்பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் வேங்கைவயலில், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து, சமத்துவ் பொங்கல் விழாவை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்தது.

அங்குள்ள அய்யனார் கோயிலில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி , சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சிபிசிஐடி தமிழ்நாடு அரசின் கீழ் தான் வருகிறது. எனவே, தமிழ்நாடு காவல்துறை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக கூற முடியாது. தற்போது அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி விசாரணைக் குழு, குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: Pongal 2023, Pudukottai- Important news