சேலத்தில் பள்ளி மாணவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று

எலி (மாதிரி படம்)

எலிக்காய்ச்சல் எனப்படும் Leptospirosis  லெப்டோபைரோஸிஸ் நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

 • Share this:
  சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில், பள்ளி மாணவனுக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாணவனின் குடியிருப்புப் பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

  மேட்டூரை அடுத்த மாதையன் குட்டை ,எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்த டேனியல் ராஜ் என்ற மாணவர், தனியார் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டதில். அவருக்கு எலிக்காய்ச்சல் எனப்படும் Leptospirosis  லெப்டோபைரோஸிஸ் நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து, மாணவருக்கு மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மாணவனின் குடியிருப்பு பகுதியில் தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாணவன் படித்து வந்த பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
  Published by:Vijay R
  First published: