Home /News /tamil-nadu /

மீண்டும் பாகுபலி கதாசிரியர் கதையில் நடிக்கும் சல்மான் கான்

மீண்டும் பாகுபலி கதாசிரியர் கதையில் நடிக்கும் சல்மான் கான்

முதல் பாகத்தை இயக்கிய கபீர் கான் இரண்டாவது பாகத்தை இயக்குவரா இல்லை வேறு இயக்குனருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை.

  • 1 minute read
  • Last Updated :
பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்தின் கதையில் மீண்டும் சல்மான் கான் நடிக்கிறார்.

ராஜமௌலியின் அனேக படங்களுக்கு கதை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். பாகுபலி இரு பாகங்களும் அவரது கதையே. ஜனவரி 7 வெளியாகவிருக்கும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் கதையையும் அவர்தான் எழுதியுள்ளார். ஜனரஞ்சகமான கதைகளை எழுதுவதில் அவர் நிபுணர்.
சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையையும் விஜயேந்திர பிரசாத்தே எழுதியிருந்தார். கடைசியாக வெளியான சல்மான் கானின் சிறந்த கமர்ஷியல் படம் என்றால் அது பஜ்ரங்கி பைஜான்தான். கபீர் கான் படத்தை இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க.. நிஜ சம்பவங்களை கையில் எடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல்! எதிர்ப்பும்.. ஆதரவும்

பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக சல்மான் கான் தெரிவித்திருந்தார். இதன் கதையை விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இந்த இரண்டாம் பாகத்தின் பெயரை நேற்று தனது 56 வது பிறந்தநாளை முன்னிட்டு சல்மான் கான் அறிவித்தார். பவன் புத்ர பைஜான் என பஜ்ரங்கி பைஜானின் இரண்டாம் பாகத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.. தலைநிமிர்ந்த தமிழ் சினிமா.. இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

சல்மான் கான் நடிப்பில் டைகர் 3, கபி ஈத் கபி தீவாளி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து பவன் புத்ர பைஜான் ஆரம்பிக்கப்படும். முதல் பாகத்தை இயக்கிய கபீர் கான் இரண்டாவது பாகத்தை இயக்குவரா இல்லை வேறு இயக்குனருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published:

அடுத்த செய்தி