கொரோனா காரணமாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருந்த வழக்கு காரணமாகவும் காந்தி மார்க்கெட் திறக்கப்படாமல் இருந்தது. இதனை எதிர்த்து வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 26 -ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை மார்க்கெட்டை திறக்க அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மார்க்கெட்டில் துப்புரவு பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இப்பணி நிறைவுற்ற நிலையில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சிலை முன் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுடன் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, திருச்சி மாவட்ட தலைவர், இளைஞரணி தலைவர் அப்துல்ஹக்கீம் மற்றம் மொத்தம், சில்லறை வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாள்தோறும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தூய்மைப் பணிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.