அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கியதால்,
தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் இதுவரை இல்லாத வகையில் 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அளித்த பேட்டியில், ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. சென்ற ஆண்டு தீபாவளியின்போது ஆவின் விற்பனை ரூ.55 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆவின் நெய் 600 டன் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு 900 டன் விற்பனை ஆகியுள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 27 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது.
Must Read : இவ்வளவு குறைவா? பெட்ரோல், டீசல் போட புதுச்சேரிக்கு படையெடுக்கும் தமிழக வாகன ஓட்டிகள்!
ஆவின் பொருட்களை அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு அளிக்க இருக்கிறோம். மிக விரைவில் பக்கத்து மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.