டாஸ்மாக் மது விற்பனை கடும் சரிவு - மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் வீழ்ச்சி

கோப்புப்படம்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை சரிந்துள்ளது.

 • Share this:
  கடந்த ஆண்டு ஜுன் மாத விற்பனையை இந்தாண்டு விற்பனை உடன் ஒப்பிடுகையில், மதுபான விற்பனை சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், விஸ்கி, ரம் உள்ளிட்ட வகை மதுபானங்களின் விற்பனை 14 சதவீதம் வரை சரிந்துள்ளது.

  அதேபோல்,பீர் மதுபான விற்பனை 45 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது. ஊரடங்கால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததே விற்பனை சரிவுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

  Also read... உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று குறைந்தது... சவரன் எவ்வளவு தெரியுமா?

  மேலும், பீர் விற்பனையின் கடும் சரிவுக்கு, பார் வசதி இல்லாமல் போனதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. விற்பனை சரிந்திருந்தாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால், தமிழக அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படவில்லை.
  Published by:Vinothini Aandisamy
  First published: