சேலம்: காதலியை தன்னிடமிருந்து பிரித்ததால் அண்ணனை வெட்டிக் கொலைசெய்த இளைஞர்.. நடந்தது என்ன?

Youtube Video

சேலம் மாவட்டத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இளைஞரின் தங்கையின் காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் தெரியவந்தது என்ன?

 • Share this:


  சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பிளஸ் டூ மாணவி. அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பாஸ்கரும் பிளஸ் டூ மாணவியும் காதலித்து வந்துள்ளனர். ஊரில் யாருக்கும் தெரியாமல் காதலித்த ஜோடிகள் அடிக்கடி வெளியூர் சென்று சுற்றியுள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

  திருமணம் ஆன பெண்ணுக்கு 18 வயது நிரம்பாததால் உறவினர்கள் காதல் ஜோடிகளை பிடித்து பஞ்சாயத்து பேசியுள்ளனர். இதில் பெண்ணின் பெரியப்பா மகனான 27 வயது அருள்குமார் மற்றும் குடும்பத்தார், காதலர்கள் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர் .

  இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் தனது காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய அருள்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாஸ்கர், தனது நண்பர் 20 வயது நண்பர் ஹேம்நாத்துடன் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றியுள்ளனர்.

  அப்போது மாரிவளவு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே அருள்குமார் தனியாக இருந்ததை கவனித்துள்ளனர். இது தான் பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம் என்று நினைத்துள்ளார் பாஸ்கர். அதனால்  வண்டியில் வைத்திருந்த ஆயுதங்களால் தனியாக இருந்த அருள்குரை சரமாரியாக வெட்டி விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

  மேலும் படிக்க.. தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மகன்: கர்நாடகாவில் கொடூரம்  தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள் குமாரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதில் சிகிச்சை பலனின்றி அருள் குமார் உயிரிழந்தார் .
   

  இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மைனர் பெண்ணை காதலிக்க இடையூறு ஏற்பட்டதால் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
  Published by:Vaijayanthi S
  First published: