முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனாவால் உயிரிழந்த சேலம் உருக்காலை பணியாளரின் குடும்பத்திற்கு வேலை கேட்டு தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

கொரோனாவால் உயிரிழந்த சேலம் உருக்காலை பணியாளரின் குடும்பத்திற்கு வேலை கேட்டு தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

கொரோனாவால் உயிரிழந்த சேலம் உருக்காலை பணியாளரின் குடும்பத்திற்கு வாரிசு வேலை கேட்டு, மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

  • Last Updated :

சேலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சேலம் உருக்காலை. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்த சேலம் உருக்காலை பணிமனையில் வெப்ப உருட்டாலை  பிரிவில் பணியாற்றி வந்த சீனியர் டெக்னீசியன் கண்ணன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில், அவரின் குடும்ப வாரிசு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் உருக்காலையிலுள்ள தொமுச, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் மூன்றாவது நாளாக நுழைவாயில் 5ஏ முன்பு தொடர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு, பகலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், போராட்டக் களத்திலேயே உறங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் ஆலைக்குள் எந்த பணியாளர்களும் செல்ல முடியாத நிலையில் ஆலை இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றிற்கு 1,000 டன்  உருக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Also read: வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடபோவதில்லை எனவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து உருக்காலை ஊழியர்களும் போராட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும், மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திவருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Labor Protest, Salem